apj abdul kalam Awards

விஷன் - 2020 விருது

பெரம்பலூரில் 19,20 /05 /2018 அன்று தேசிய வளர்ச்சிக்கான மாநாட்டில் நம் தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை செய்து வரும் சேவையை பாராட்டி விருது வழங்கி கெளரவ படுத்தினார்கள்

வளரும்கலாம்விருது - 2018

வளரும்கலாம்விருது – 2018 ராமேஸ்வரத்தில் டாக்டர் , APJ.அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் 3ஆண்டு நினைவு நாளில் #காஞ்சிமுத்தமிழ்மையம் நடத்திய விழாவில் தமிழகத்தில் ஆசிரியர் சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு #அப்துல்கலாம் விருதும் சமூக சேவையில் சிறப்புடன் சேவையாற்றி வரும் அமைப்புகளுக்கு #வளரும்கலாம்விருதும் பள்ளியில் சிறந்த மாணவ மாணவியர் க்கு #நாளைய_கலாம் விருதும் வழங்கி கெளரவபடுத்தி பாராட்டினார்கள் …
இவ்விருதுக்கு நம் அமைப்பை பரிந்துரை செய்த #வேந்தர்_டிவி பட்டிமன்ற புகழ் Peruvaisanthosh அவர்களுக்கு நன்றியையும் இவ்விருதினை சமர்ப்பணம் செய்கிறேன் …
தூக்கத்தில் மட்டுமே கனவுகண்டு கொண்டிருந்த ஏனை தூக்கத்தையே கணவாய் காணும் அளவிற்கு உழைக்க ஊக்குவித்த உன்னதமே! என்றும் உங்கள் வழியில் எங்கள் பயணம் தொடரும்….
என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியும் நம் அறக்கட்டளை க்கு தேவையான உதவிகளை வழங்கிவரும் #அண்னன் , #தம்பி , #தங்கை , #அக்கா , மாமா , மச்சான் , என் முக நூல் நண்பர்களுக்கும் , முகம் தெரியா நண்பர்களுக்கும் இவ்விருதினை தங்களது பொற்ப்பாதங்களில் வணங்கி சமர்ப்பணம் செய்கிறேன் ….
என் வெற்றி க்கு உறுதுனையாக இருப்பவர்கள் ;
இவ்விருதுக்கு நம்மை தேர்வு செய்து விருது வழங்கிய காஞ்சி முத்தமிழ் மையத்திற்கும் அதன் நிருவனர் , திரு ; லாரன்ஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல ….
என்றும் மக்கள் நலனில் – தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை

apj abdul kalam Awards

14-10-2017 அன்று டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை கிருஷ்ணகிரி & தருமபுரி மாவட்டம் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் நாம் செய்துவரும் சமூக சேவையை பாராட்டி கலாமின் சிறந்த சேவகர் – 2017 என்ற விருது தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது ….